13-ம் ஆண்டு நினைவஞ்சலி திரு.க. சுப்பு Ex MLA | MLC
1980களில் எம்.ஜி.ஆர். ஆட்சியில், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் (இடி, மின்னல், மழை) சட்டசபையில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சுற்றப்பயணம் செய்து எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பற்றி அதிரடியாக பேசி வந்தனர் அந்த மூவரும் ஆளும் அரசுக்கு பெரும் சவாலாக இருந்தனர்.
அந்த அணியில் மழையாக அதிரடி விமர்சனங்களை முன் வைத்தவர் க.சுப்பு. தமிழக அரசியலில் அவரது பேச்சு என்றும் நிலைத்திருக்கும்.
மதுரை திருமங்கலத்தையடுத்த பிள்ளையார் நத்தத்தில் 1941-ல் பிறந்தவர் க.சுப்பு. கல்லூரி நாட்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தலைசிறந்த சொற்பொழிவாளராக விருது பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டராக தன் அரசியல் வாழ்வை துவக்கிய சுப்பு ராஜபாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பல்வேறு கூட்டங்களில் பேச்சாளராக பங்கேற்றார். 1971ம் ஆண்டு ராஜபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.